உலகம்

"டிரம்ப்பை எதிர்க்க பைடனை விட கமலா ஹாரிஸ்தான் தகுதியானவர்" - வெளியான கருத்து கணிப்பு !

அமெரிக்க அதிபர் பைடனை விட துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருவது ஆய்வு முடிவின் மூலம் அம்பலமாகியுள்ளது.

"டிரம்ப்பை எதிர்க்க பைடனை விட கமலா ஹாரிஸ்தான் தகுதியானவர்"  - வெளியான கருத்து கணிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

"டிரம்ப்பை எதிர்க்க பைடனை விட கமலா ஹாரிஸ்தான் தகுதியானவர்"  - வெளியான கருத்து கணிப்பு !

அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக உள்ளார்.

ஆனால், தற்போது அவரை விட துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருவது சி.என்.என் ஆய்வு முடிவின் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்க வாக்காளர்களிடம் செய்தி நிறுவனமான சி.என்.என் ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளது.

அதில், அதிபர் தேர்தலில் பைடன் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டால் பைடனுக்கு 43% மட்டுமே வாக்குகளும், டிரம்பிற்கு 49% வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் கமலா ஹாரிஸுக்கு 45% வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக கட்சி வேட்பாளராக பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories