உலகம்

பிரதமர் பதவியை ஏற்க மறுத்த முக்கிய தலைவர் : பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் குழப்பம்- அரசமைக்கப்போவது யார்?

பிரதமர் பதவியை ஏற்க மறுத்த முக்கிய தலைவர் : பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் குழப்பம்- அரசமைக்கப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2922-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரின் கட்சியும் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்கு கடந்த 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் பதிவான வாக்குகள் அடுத்த நாளே எண்ணப்பட்டது. இதில் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களுக்கு 102 தொகுதிகள் கிடைத்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 தொகுதிகளும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுகிறது.

பிரதமர் பதவியை ஏற்க மறுத்த முக்கிய தலைவர் : பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் குழப்பம்- அரசமைக்கப்போவது யார்?

இதன் காரணமாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் உடன்பாடு ஏற்பட்டுபாகிஸ்தான் முஸ்லிம் லீக் தனித்து ஆட்சியமைக்கவுள்ளதாகவும், இந்த அரசுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டு மீண்டும் பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறியும், அந்த கட்சியை ஆட்சியில் பங்கேற்க பாகிஸ்தான் முஸ்லீம் லீக் வற்புத்தி வருகிறது. ஆனால், இதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளதால் அங்கு மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, " முதல் 3 வருடத்துக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கை சேர்ந்தவர் பிரதமராக இருப்பார் என்றும், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை. நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories