உலகம்

தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - காரணம் என்ன ?

ஈரான் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தானின் பலுசிஸ்தானை மையமாக கொண்டு ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் பாகிஸ்தானின் அருகாமை நாடான ஈரானில் பல தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஈரானில் கடுமையான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டிய ஈரான் பாகிஸ்தானில் அந்த அமைப்பின் தளங்கள் இருக்கும் இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அனுமதி இல்லாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தத் தாக்குதல்கள் தன் இறையாண்மையை மீறுவதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியிருந்தது. மேலும், தனது ஈரான் தூதரையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - காரணம் என்ன ?

இதனால் அந்த பிராந்தியத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சகம் "பாகிஸ்தானின் இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம்" என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது"என்று கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories