உலகம்

நடுவானில் சிதறிய விமானத்தில் கதவு: பயங்கர காற்றில் இழுக்கப்பட்ட பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?

நடுவானில் விமானத்தில் கதவு உடைந்ததால் விமானத்தில் இருந்த பயணிகள் வெளியே இழுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

நடுவானில் சிதறிய விமானத்தில் கதவு:  பயங்கர காற்றில் இழுக்கப்பட்ட பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானம் ஒன்று அமெரிக்காவின் ஓரிகான் நகரில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோ நகரத்துக்கு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

ஓரிகான் நகர விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்த விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானத்தின் கதவு வெடித்துச் சிதறியது. இதனால் வெளியிலிருந்து பயங்கர வேகத்தில் காற்று பயணிகளை வெளியே இழுத்துள்ளது.

எனினும் பயணிகள் உடனடியாக பாதுகாப்பு பெல்ட்டை அணிந்த காரணத்தால் அதில் யாரும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் கதவுக்கு அருகில் இருந்த இருக்கை ஒன்று பயங்கர சேதமடைந்தது. மேலும், குழந்தை ஒன்றுக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

நடுவானில் சிதறிய விமானத்தில் கதவு:  பயங்கர காற்றில் இழுக்கப்பட்ட பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?

இந்த அபாய நிலையைத் தொடர்ந்து அவசர கால ஆக்சிஜன் மூலம் பயணிகள் சுவாசிக்கத்தொடங்கினர். இதனிடையே நிலைமையின் அபாயத்தை உணர்ந்த விமானிகள் விமானத்தை உடனடியாக போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்துக்கு திரும்பியுள்ளனர்.

அங்கு விமானம் அவசர அவசரமாக தரையிறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், விமானிகளின் சாதுரியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories