உலகம்

10 முறை துப்பாக்கி சூடு... கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவர் - அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்கா சிகாகோவில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 முறை துப்பாக்கி சூடு... கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவர் - அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ளது உழவூர் என்ற கிராமம். இங்கு மீரா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பழையபள்ளி என்ற இடத்தில் வசித்து அமல் ரெஜி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், இவர்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசித்து வந்துள்ளனர்.

10 முறை துப்பாக்கி சூடு... கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவர் - அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கணவன் மனைவிக்குள் வழக்கம்போல் சிறு சிறு சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், மீரா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இருப்பினும் கூட இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இருவரும் அங்கிருக்கும் சர்ச்சுக்கு சென்றுள்ளனர். அங்கே பிரார்த்தனை செய்துவிட்டு, கார் பார்க்கிங்கில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

10 முறை துப்பாக்கி சூடு... கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவர் - அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அந்த நேரத்தில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, அமல் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தனது கர்ப்பிணி மனைவி மீராவை சுட்டுள்ளார். மீராவை நோக்கி அமல் சுமார் 10 தடவை சுட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் மீராவின் கண்ணம், வயிற்று பகுதிகளில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக மீராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், கணவர் அமலை கைது செய்து விசாரித்தனர். அப்போது குடும்பப் பிரச்னை காரணமாக தனது மனைவியை சுட்டதாக அமல் தெரிவித்துள்ளார். தற்போது மீராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories