உலகம்

மாட்டிறைச்சி முதல் Ice-Cream வரை... ஏலத்தில் வாங்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் கடைசி Menu Card !

டைட்டானிக் கப்பலின் கடைசி மெனு கார்டு தற்போது ரூ.84 லட்சத்துக்கு ஏலத்தில் போயுள்ளது.

மாட்டிறைச்சி முதல் Ice-Cream வரை... ஏலத்தில் வாங்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் கடைசி Menu Card !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகத்திலேயே மிகவும் பிரம்மிப்பாக அனைவரும் பார்த்த ஒரு திரைப்படம் தான் டைட்டானிக். 'டைட்டானிக்' திரைப்படம் 1997-ம் ஆண்டு வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் இது உலக மக்களிடமும் பெரிய அளவில் பிரபலமானது. இதனால் இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இந்த படமானது, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 'டைட்டானிக்' என்ற கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்தது.

1912-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவிற்குச் சென்ற டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது பனிப்பாறை மீது மோதி இரண்டாக உடைந்து கடலுக்கு அடியில் மூழ்கியது. இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மாட்டிறைச்சி முதல் Ice-Cream வரை... ஏலத்தில் வாங்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் கடைசி Menu Card !

உலக வரலாற்றில் மிகவும் மோசமாகக் கப்பல் விபத்தாக இந்த விபத்து, தற்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் 1958ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதும் கூட இந்த கப்பலின் எச்சங்கள் நீருக்கடியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தற்போது இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட கடைசி உணவு பட்டியல் (Menu Card) தற்போது இந்திய மதிப்பில் ரூ.84 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. சுமார் 111 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம் போயுள்ள இந்த மெனு கார்டில் மாட்டிறைச்சி முதல் ஐஸ் க்ரீம் வரை பலவை இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வு தற்போது உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

மாட்டிறைச்சி முதல் Ice-Cream வரை... ஏலத்தில் வாங்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் கடைசி Menu Card !

அதாவது 1912-ம் ஆண்டு இறுதியாக இந்த கப்பல் பயணித்தது. அப்போது இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்று தனியாக உணவு பட்டியல் ஒன்று இருந்துள்ளது. அந்த மெனு கார்டு அண்மையில் ஏலத்துக்கு வந்தது. அப்போது இதனை நபர் ஒருவர் 83 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.84.7 லட்சம்) கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த மெனு கார்டானது அந்த கப்பலில் பயணிக்கும் முதல் வகுப்பு பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இந்த கார்டில் மாட்டிறைச்சி, வாத்து இறைச்சி, சாதம், ஐஸ் கிரீம், மீன் வகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த மெனு கார்டானது கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஏலம் போயுள்ளது என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories