உலகம்

“மனோரீதியாக இனி இயலாது.. Omegle 2009-2023” : Video Chat தளத்தை மூடிய நிறுவனர் ! - காரணம் என்ன ?

தனது 18 வயதில் உருவாக்கிய பிரபல வீடியோ Chat தளமான Omegle நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் லீப் கே ஃப்ரூக்ஸ் அறிவித்துள்ளார்.

“மனோரீதியாக இனி இயலாது.. Omegle 2009-2023” : Video Chat தளத்தை மூடிய நிறுவனர் ! - காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள இணைய உலகில் பலவை இணையம் சார்ந்தே இருக்கிறது. அனைவரும் வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் அனைவரும் இணையத்தில் மூழ்கி கிடைப்பதனாலேயே பல தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் நல்லவைக்காக உருவாக்கப்பட்ட சில ஆப்கள் நாளடைவில் வேறொரு பாதையை நோக்கி நகர தொடங்குகிறது.

அப்படி ஒரு ஆப் தான் 'OMEGLE'. வீடியோ சேட் தளமான இதில், யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வீடியோ கால் செய்து பேசிக்கொள்ளலாம். அப்படி பேசும்போது அவர்கள் குறித்த விவரங்களை அவர்கள் தெரிவித்தால் மட்டுமே மற்றவருக்கு தெரியவரும். இதற்காக ஃபோன் நம்பரோ, அவர்கள் குறித்த விவரமோ எதிர் பேசுபவர்களுக்கு தெரியாது. நாமே கூறினால் மட்டுமே தெரியும்.

“மனோரீதியாக இனி இயலாது.. Omegle 2009-2023” : Video Chat தளத்தை மூடிய நிறுவனர் ! - காரணம் என்ன ?

இந்த வீடியோ சேட்டை லீஃபி கே ப்ரூக்ஸ் (Leif K-Brooks) என்பவர் தனது 18 வயதில் உருவாக்கினார். 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த தளமானது இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது. அமெரிக்காவின் வெர்மண்ட் பகுதியை சேர்ந்த இவர், இணையத்தில் பெரிதாக ஆர்வம் கொண்டுள்ளார். அதோடு இவர் ஆரம்பத்தில் தனக்கு இருக்கும் சந்தேகங்களை தனது ஆசிரியரிடம் கேட்க கூச்சமும் அச்சமும் அடைந்துள்ளார்.

பின்னர் இணையத்தை பயன்படுத்தும்போது யாரென்று தெரியாத நபர்களிடம் அவருக்கு உரிய சந்தேகங்களை கேட்க முடிந்தது. இதனால் omegle செயலியை உருவாக்கினார். 2009-ல் இவர் இந்த செயலியை நல்லது என்று தொடங்கினார். இந்த செயலி மூலம் ஒருவர் தங்களுக்கு தெரியாத நபரை தொடர்பு கொண்டு உரையாட முடியும்.

“மனோரீதியாக இனி இயலாது.. Omegle 2009-2023” : Video Chat தளத்தை மூடிய நிறுவனர் ! - காரணம் என்ன ?

இதனால் சிலர் தங்கள் மன உளைச்சலை போக்க இதனை பயன்படுத்தினர். உலகம் முழுக்க யாரென்று தெரியாத நபருடன் உரையாடுவது ஒரு த்ரில்லாக பார்க்கப்பட்டது. சிலருக்கு இதனால் மன நிம்மதியும் கிடைத்தது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்கள், 2கே கிட்ஸ்களிடம் இந்த செயலி இந்தியாவில் அதிகமாகி பயன்படுத்தப்பட்டது.

உலகம் முழுக்க இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் இந்த செயலி மூலம் ஆபாச சாட்கள் வரத்தொடங்கியது. அதோடு ஆபாசம், அவதூறு உள்ளிட்ட தவறான வழிகளில் இந்த செயலி செயல்பட தொடங்கியது. மேலும் இந்த செயலி மூலம் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. தொடர்ந்து இந்த செயலி ஆபத்து என சில கூற்றுகளும் வரத்தொடங்கியது.

“மனோரீதியாக இனி இயலாது.. Omegle 2009-2023” : Video Chat தளத்தை மூடிய நிறுவனர் ! - காரணம் என்ன ?

இந்த நிலையில், Omegle-ஐ மூடுவதாக அதன் நிறுவனர் ப்ரூக்ஸ் தெரிவித்ததோடு, அதனை செயல்படுத்தியும் உள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், இந்த தளத்தை செயல்படுத்துவது நிதி ரீதியாகவோ, மனோரீதியாகவோ இனி இயலாது என்று குறிப்பிட்ட அவர், இனி Omegle இணையதளத்தின் உள்ளே சென்றால், 'Omegle 2009-2023' என்று வாசகம் பொருந்திய கல்லறை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Omegle தளம் மூடப்பட்டு விட்டதால் அதன் வாடிக்கையாளர்கள், ரசிகர்கள் என பலரும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர். 18 வயதில் தொடங்கப்பட்ட இந்த செயலியை 14 ஆண்டுளுக்கு பிறகு அதன் நிறுவனர் மூடியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories