இத்தாலியின் 'கால்விரல்' என்று வர்ணிக்கப்படும் கிராமம் காலப்ரியா. கடலோர அழகு, மலை நிலப்பரப்புகளுக்குப் பெயர் பெற்றதும் கூட. இக்கிராமத்தில் 2021ம் ஆண்டு 5000க்கும் குறைவான மக்கள் இருந்தனர்.
இந்த நகரங்களில் சில, மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெறவில்லை என்றால், ஒரு சில ஆண்டுகளில் முழு மக்கள்தொகை அழியும் அபாயத்தை எதிர்கொள்ளலாம். இதைச் சமாளிக்க இந்த கிராம நிர்வாகம் active residency income என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, இக்கிராமத்தில் புதிதாக வசிக்க வருபவர்களுக்கு 28 ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.25 லட்சம் வழங்கப்படும். மேலும் கிராமத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும், சிறு தொழில்கள் தொடங்க முன்வர வேண்டும். 90 நாட்களுக்குள் கிராமத்தில் குடியேற வேண்டும் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து இளைஞர்கள் பலரும் இக்கிராமத்திற்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.