230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் டைனோசர் என்ற கொடூர விலங்கு இருந்துள்ளது. காலத்தின் அழிவால் இந்த 21ம் நூற்றாண்டு இந்த விலங்கினம் இல்லை. இப்போது இருக்கும் யாரும் இந்த விலங்கைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால் டைனோசர் எப்படி இருக்கும் என்பதை "ஜுராசிக் பார்க்" திரைப்படம்தான் நமக்குக் காட்டியது. மேலும் எத்தனை வகையான டைனோசர் இனங்கள் இருந்தன அதன் குணங்கள் என்ன என்பதை எல்லாம் இந்த படம் தான் நமக்கு எடுத்துக் கூறியது.
இந்த உலகின் பல்வேறு இடங்களில் டைனோசர் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல இடங்களில் டைனோசர் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த மாதம் ஏலத்திற்கு விடப்படுகிறது எனக் கொல்லர் என்ற ஏல நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல்முறையாகும்.
இதனால் பறக்கும் இடைனோசர் எலும்புக்கூட்டை வாங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறன. இந்த பறக்கும் டைனோசரின் எலும்புக்கூடு சுமார் ரூ.70 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.