உலகம்

நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி-பேருந்து மீது மோதியதால் கோர விபத்து: 48 பேர் உடல் நசுங்கி பலி

கென்யாவில் நள்ளிரவு நேரத்தில் லாரி ஒன்று மோதியதில் ஏற்பட்ட சாலை விபத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி-பேருந்து மீது மோதியதால் கோர விபத்து: 48 பேர் உடல் நசுங்கி பலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது கென்யா. இங்கு நேற்று இரவு பெரிய லாரி ஒன்று கெரிச்சோ (Kericho) என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது லண்டியானி சந்திப்பு (Londiani junction) என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறிய லாரி ஓட்டுனர், தனது லாரியை தாறுமாறாக ஓட்ட நேர்ந்தது.

இதனால் அந்த லாரி, அங்கே இருந் பேருந்துகள் மீது மோதியது. இதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் அதில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து இந்த கோர விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ், போலீஸ் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி-பேருந்து மீது மோதியதால் கோர விபத்து: 48 பேர் உடல் நசுங்கி பலி

அப்போது படுக்காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு உடல்களை மீட்க்கும் பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 45 உடல்களை கைப்பற்றிய மீட்ப்புக்குழு அவற்றை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூற்றுப்படி, இந்த கோர விபத்தில் சுமார் 48 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அதில் 45 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி-பேருந்து மீது மோதியதால் கோர விபத்து: 48 பேர் உடல் நசுங்கி பலி

இந்த கோர விபத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் நள்ளிரவு நேரத்தில் லாரி ஒன்று மோதியதில் ஏற்பட்ட சாலை விபத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் சாலை விபத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு கென்யாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சில விவரங்கள் வெளியான நிலையில், நேற்று நள்ளிரவு நடந்த இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories