உலகம்

High Heels அணிந்து 100 மீட்டர் ஓட்டம்.. 12 வினாடிகளில் கடந்து சாதித்த சர்க்கரை நோயுள்ள ஸ்பெயின் வீரர்!

ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு 100 மீட்டர் தூரத்தை 12.82 வினாடிகளில் ஓடி ஸ்பெயின் வீரர் கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

High Heels அணிந்து 100 மீட்டர் ஓட்டம்.. 12 வினாடிகளில் கடந்து சாதித்த சர்க்கரை நோயுள்ள ஸ்பெயின் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக பெண்கள் அணியும் காலணியில் அவர்களுக்கு பிடித்த ஒன்றாக ஹீல்ஸ் அமைந்துள்ளது. இதனால் மருத்துவ ரீதியாக பெண்களுக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சில கருத்துகளும் உலாவி வருகிறது. இருப்பினும் பெண்கள் பலருக்கும் இந்த ஹீல்ஸ் மீது தனி அபிப்ராயம் உள்ளது. இதனை போட்டுகொண்டு அநேகமானவர்களால் நடக்கவே முடியாத நிலையில், ஒருவர் இதனை அணிந்துகொண்டு ஓடியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ். 34 வயதான இவர் ஓட்டப்பந்தய வீரர் ஆவார். இவர் ஓட்ட பந்தயத்தை வித்தியாசமான முறையில் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி பெண்கள் அணியும் ஹீல்ஸ்-ஐ அணிந்துகொண்டு 100 மீட்டர் தூரம் வரை ஓடியுள்ளார். அதிலும் அந்த 100 மீட்டர் தூரத்தை வெறும் 12.82 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

High Heels அணிந்து 100 மீட்டர் ஓட்டம்.. 12 வினாடிகளில் கடந்து சாதித்த சர்க்கரை நோயுள்ள ஸ்பெயின் வீரர்!

இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கிறிஸ்டியன் பல்வேறு சாதனைகளை ஓட்டபந்தயத்தில் செய்துள்ளார். அவை பின் வருமாறு :-

1. Fastest 100 m blindfolded: 12.45 seconds

2. Fastest 100 m in clogs: 12.58 seconds

3. Fastest 100 m run backwards: 13.17 seconds

4. Fastest 100 m balancing a baseball bat on a finger: 13.83 seconds

5. Fastest 100 m balancing a guitar on a finger: 14.31 seconds

6. Fastest 100 m carrying a waiting service tray: 14.51 seconds

7. Fastest 100 m while balancing a table tennis ball on a bat: 14.69 seconds

8. Fastest 100 m juggling three objects whilst blindfolded: 15.28 seconds

9. Fastest 100 m balancing a pool cue on a finger: 15.32 seconds

10. Fastest 100 m run backwards carrying a 60 lb pack: 23.45 seconds

11. Fastest 100 m backwards on a single leg: 24.76 seconds

12. Fastest 100 m in a sack: 25.96 seconds

High Heels அணிந்து 100 மீட்டர் ஓட்டம்.. 12 வினாடிகளில் கடந்து சாதித்த சர்க்கரை நோயுள்ள ஸ்பெயின் வீரர்!

34 வயதுடைய கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸுக்கு தற்போது சர்க்கரை நோய் இருக்கிறது. இதுகுறித்து தெரிவித்த அவர், தன்னைப் போன்ற டைப் 1 நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு இல்லாதவர்களை விட அதிகமாகவோ, அதற்கு மேற்பட்ட விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே இதனை முயற்சித்ததாக கூறினார்.

இவர் இப்போது படைத்திருக்கும் சாதனையானது, உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனிதர் என அழைக்கப்படும் உசைன் போல்ட்டின், 100 மீட்டர் ட் உலக சாதனையை விட 3.24 வினாடிகள் குறைவாக ஓடி இவர் சாதனை புரிந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories