உலகம்

புதினை உக்ரைன் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு.. கொலை வெறியில் தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. நடப்பது என்ன ?

ரஷ்யா அதிபர் மாளிகைக்கு மேல் உக்ரைன் அனுப்பிய ட்ரோன் பறந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில் உக்ரைன் -ரஷ்ய போர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

புதினை உக்ரைன் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு.. கொலை வெறியில் தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. நடப்பது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

புதினை உக்ரைன் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு.. கொலை வெறியில் தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. நடப்பது என்ன ?

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

இதனிடையே கடந்த மே 3-ம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையை நோக்கி ஆளில்லா டிரோன் ஒன்று வந்ததாகவும், அதனை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா வீடியோ வெளியிட்டது. மேலும், அதிபர் மாளிகையான கிரெம்ளினை நோக்கி ட்ரோன் அனுப்பி அதிபர் புதினை கொல்ல முயன்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அவரது குழுவையும் கொலைசெய்ய வேண்டிய நேரம் இது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான டிமிட்ரி மெத்வதேவ்.

புதினை உக்ரைன் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு.. கொலை வெறியில் தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. நடப்பது என்ன ?

அதோடு இந்த தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் விதமாக உக்ரைன் மேல் தீவிர தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 60-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் தாக்குதலுக்கு அனுப்பியதாகவும், இதில் பாதி ட்ரோன்களுக்கு மேல் உக்ரைன் தலைநகர் கீவ்வை அழிக்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், உக்ரைனுக்குள் ரஷ்யா படைகள் நுழைய வசதியாக உக்ரைன் வசம் இருக்கும் பாக்முத் நகரை கைப்பற்ற அதிகளவிலான படைகளை ரஷ்யா அனுப்பவுள்ளதாகவும், இதனால் விரைவில் பாக்முத் நகரம் ரஷ்ய படைகளிடம் வீழும் என்றும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் உக்ரைன் -ரஷ்ய போர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories