உலகம்

அம்மா காப்பாற்றுங்க.. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏமாற்று .. அமெரிக்காவை உலுக்கிய நூதன மோசடி !

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி நடக்க முயற்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா காப்பாற்றுங்க.. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏமாற்று .. அமெரிக்காவை உலுக்கிய நூதன மோசடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

அம்மா காப்பாற்றுங்க.. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏமாற்று .. அமெரிக்காவை உலுக்கிய நூதன மோசடி !

இவ்வாறு செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு புரட்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதனை வைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாவதை போன்று செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படம் உண்மை என்றே பலரால் பரப்பப்பட்டது.

இந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவை வைத்து பெரிய அளவில் மோசடிகள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணுக்கு ஒரு மொபைலில் ஒருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் அவரின் மகள் என்னை காப்பாற்றுங்கள் என்ற குரல் கேட்டுள்ளது.

அம்மா காப்பாற்றுங்க.. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏமாற்று .. அமெரிக்காவை உலுக்கிய நூதன மோசடி !

அதோடு அந்த அழைப்பில் பேசிய நபர் மகள் உயிரோடு வேண்டும் என்றால் 30 நிமிடத்தில் 50 ஆயிரம் டாலர் தருமாறு கூறியுள்ளனர். அது மகளின் குரல் என்பதால் மகளை அந்த நபர் கடத்திவைத்திருப்தாக நம்பிய அந்த பெண் இதனால் பல்வேறு நபர்களிடம் பணம்கேட்ட நிலையில், தனது தோழிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது அந்த தோழியின் வீட்டில் தான் மகள் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த போன்காலில் மகள் குரல் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பதும், சமூக வலைத்தளத்தில் இருந்து மகளின் குரலை எடுத்த நபர்கள் அதன்மூலம் போலியாக மகளின் குரலை உருவாக்கி அதன்மூலம் மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories