மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நிச்சயம் நடைபெற்று அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண சடங்குகள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது.
முதலிரவின்போது அந்த தம்பதி ஒரே அறையில் இருந்தபோது மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் தையல் போடப்பட்டிருந்த காயம் இருந்துள்ளது. மணமகன் அதனை குறித்து கேட்டபோது காயம் ஏற்பட்டதால் சிறிய அளவில் தையல் போடப்பட்டது என முதலில் மணமகள் சமாளித்துள்ளார்.
ஆனால், 7-8 தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் சந்தேகமடைந்து இது குறித்து காட்டமாக கேள்வியெழுப்பிய நிலையில், மனைவி வேறு வழியின்றி உண்மையை கூறியுள்ளார். அதன்படி மனைவிக்கு ஏற்கனவே ஒரு ஆணுடன் காதல் இருந்தது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் காதலனோடு சேர்ந்து இருந்ததில் அவர் கர்ப்பமானதும் ஆனால் அவர்களின் காதலை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்காத நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் வேறு வழியின்றி அதனை அறுவை சிகிச்சை மூலம் கலைத்ததும் கணவருக்கு தெரியவந்தது.
மேலும், இந்த உண்மைகளை மறைந்து அந்த பெண்ணை இந்த இளைஞருக்கு பெண்ணின் வீட்டார் திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைத்த அந்த இளைஞர் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். ஆனால், பெண்ணின் வீட்டார் கணவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்ததோடு ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.