உலகம்

உக்ரைன் போரில் ஓங்கும் ரஷ்யாவின் கரம்.. வெளிவந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்.. முழு விவரம் என்ன ?

உக்ரைன் -ரஷ்யா தொடர்பாக அமெரிக்க ராணுவத்தலைமையகமான பெண்டகனின் ரகசிய ஆவணங்கள் கடந்த வாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போரில் ஓங்கும் ரஷ்யாவின் கரம்.. வெளிவந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்.. முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

உக்ரைன் போரில் ஓங்கும் ரஷ்யாவின் கரம்.. வெளிவந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்.. முழு விவரம் என்ன ?

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைன் போரில் ஓங்கும் ரஷ்யாவின் கரம்.. வெளிவந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்.. முழு விவரம் என்ன ?

இந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா தொடர்பாக அமெரிக்க ராணுவத்தலைமையகமான பெண்டகனின் ரகசிய ஆவணங்கள் கடந்த வாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள ஆயுதங்கள் குறித்தும் போர் வியூகங்கள் குறித்தும் விளக்கமாக அறிக்கை இருப்பது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த போர் வியூகங்கள் தற்போது ரஷ்யாவுக்கு தெரியவந்த நிலையில், போரில் ரஷ்யாவின் கை ஓங்கும் என கூறப்படுகிறது. அதுபோல உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு தென்கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளை அமெரிக்கா வற்புறுத்தி வந்ததும் இந்த அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை குறித்த விவரங்கள் உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில்,அதன் சில பகுதிகளை ரஷ்யா மாற்றிவிட்டதாகவும், இது எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடைபெறும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories