உலகம்

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவம்.. ஹெலிகாப்டர் குண்டுவீச்சில் 100-கும் மேற்பட்டோர் பலி!

சொந்த நாட்டு மக்களின் மீதே மியான்மர் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவம்.. ஹெலிகாப்டர் குண்டுவீச்சில் 100-கும் மேற்பட்டோர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அவரது மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி பொறுப்பேற்றார்.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவம்.. ஹெலிகாப்டர் குண்டுவீச்சில் 100-கும் மேற்பட்டோர் பலி!

அவரது ஆட்சிக்காலத்தில் ராக்கைன் மாநிலத்தில் இராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கு ஆங் சான் சூகி எதிர்ப்பு தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அங்கு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபொது ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது.

ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூகி உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் செயலில் மியான்மர் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவம்.. ஹெலிகாப்டர் குண்டுவீச்சில் 100-கும் மேற்பட்டோர் பலி!

இந்த நிலையில், மியான்மரில் சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக திரண்டிருந்த பொதுமக்கள் மீது மியான்மர் ராணுவம் நேற்று ஹெலிகாப்டர் மூலம் கூட்டமாக நின்று கொண்டிருந்த மக்களை நோக்கி குண்டு வீசியுள்ளது. ராணுவம் நடத்திய தாக்குதிலில் இதுவரை 100 பேர்வரை உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் குழந்தைகள், பத்திரிகையாளர்கள் என பலர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்பதை ஒப்புக் கொண்டுள்ள மியான்மர் ராணுவம், "அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் எதிர்ப்பாளர்கள் அமைப்பின் அலுவலகம் சாஜைங் பகுதியில் காலை எட்டு மணியளவில் திறக்கப்பட இருந்தது. அப்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது" என்று இந்த தாக்குதலுக்கு விளக்கம் அளித்துள்ளார். சொந்த நாட்டுமக்கள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories