உலகம்

சோத்துக்கே வழியில்ல, இதில் ஆயுதம் வாங்க இத்தனை கோடியா ? -வெளியான அறிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

பாகிஸ்தான் தனது பொது பட்ஜெட்டில், ஆயுதங்கள் வாங்குவதற்காக கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக ஆஃப்கான் புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோத்துக்கே வழியில்ல, இதில் ஆயுதம் வாங்க இத்தனை கோடியா ? -வெளியான அறிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

சோத்துக்கே வழியில்ல, இதில் ஆயுதம் வாங்க இத்தனை கோடியா ? -வெளியான அறிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்தது.

சோத்துக்கே வழியில்ல, இதில் ஆயுதம் வாங்க இத்தனை கோடியா ? -வெளியான அறிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

கராச்சி, லாகூர், பைசலாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்டும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெகுவிரைவில் அந்த நாடு திவாலாகும் என கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தனது பொது பட்ஜெட்டில், ஆயுதங்கள் வாங்குவதற்காக ராணுவத்துக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக ஆஃப்கான் புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டு மக்கள் ஒரு வாய் சோற்றுக்காக நெடுநேரம் வரிசையில் நிற்கும் நிலையில், இந்த தகவல் அந்த மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சோத்துக்கே வழியில்ல, இதில் ஆயுதம் வாங்க இத்தனை கோடியா ? -வெளியான அறிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், நாடு பெரும் பஞ்சத்தை நோக்கி செல்லும் இந்த தருணத்தில், பாகிஸ்தான் ராணுவம், ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியை எடுத்துக்கொள்கிறது. ரானுவத்தினருக்கான சலுகைகள் கொஞ்சம் கூட குறைக்கப்படாமல் புட்ஜெட்டில் பெரும் நிதியை ராணுவம் எடுத்துக்கொள்கிறது. 2020ஆம் ஆண்டு 92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய நிலையில், இது 2021ஆம் ஆண்டு 263 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories