உலகம்

ஆயிரம் ரூபாய் பலூனை தாக்க 3 கோடி மதிப்புடைய ஏவுகணை செலுத்திய அமெரிக்கா.. நெட்டிசன்கள் கிண்டல் !

சில ஆயிரம் மதிப்புடைய பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கா அனுப்பிய ஏவுகணையின் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 3 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரம் என்பது தெரியவந்துள்ளது.

ஆயிரம் ரூபாய் பலூனை தாக்க  3 கோடி மதிப்புடைய ஏவுகணை செலுத்திய அமெரிக்கா.. நெட்டிசன்கள் கிண்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்துக்கு சவாலாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. சமீபத்தில் சீனா சொந்தம் கொண்டாடும் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் பறந்த ஒரு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், இந்த பலூன் சீனாவுடையது என்றும் தங்களை உளவு பார்க்க சீனா அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது.

ஆயிரம் ரூபாய் பலூனை தாக்க  3 கோடி மதிப்புடைய ஏவுகணை செலுத்திய அமெரிக்கா.. நெட்டிசன்கள் கிண்டல் !

ஆனால், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்த நிலையில், இந்நிலையில், அமெரிக்காவின் உளவு பார்க்கும் பலூன் என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. மேலும் இந்த பலூன் வானிலையை ஆய்வு செய்ய அனுப்பட்டதாகவும் இதில் உளவு பார்க்கும் விமான கருவிகள் எதுவும் இல்லையென்றும் விளக்கமளித்து.

மேலும், இந்த பலூன் காற்றின் வேகம் காரணமாக அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் நுழைந்துள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை அமெரிக்காவிடம் அளிக்கவுள்ளோம் என்றும் சீனா அறிவித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் பறந்த ஒரு பலூனை அமெரிக்க ராணுவம் ஏவுகணை கொண்டு தாக்கி அளித்தது.

ஆயிரம் ரூபாய் பலூனை தாக்க  3 கோடி மதிப்புடைய ஏவுகணை செலுத்திய அமெரிக்கா.. நெட்டிசன்கள் கிண்டல் !

இந்த நிலையில், அந்த பலூன் அமெரிக்காவை சேர்ந்த ஹாபி குரூப் என்ற அமைப்புக்கு சொந்தமான வெப்பநிலை, ஈரப்பதம், காற்றாலைகள் பற்றி அளவிடும் பலூன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், வெறும் சில ஆயிரம் மதிப்புடைய இந்த பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கா அனுப்பிய ஏவுகணையின் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 3 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரம் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் அவசரத்தில் செயல்பட்ட அமெரிக்க ராணுவத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories