பூமிப்பந்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியாக நாடுகளில் ஒன்றாகும். அங்கு சராசரி ஆண்டு வெப்பம் 10.82 என்ற அளவிலேயே இருந்துவருகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் அதிகமாக வெந்நீர் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் அரசு சார்பில் அங்கு முக்கிய இடங்களில் வெப்ப நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெப்ப நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்த வெப்ப நீரூற்றுகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி போலிஸார் நடத்திய சோதனையில், பெண்கள் குளிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்ததொடர்பாக டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனையிட்டதில் 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகளில் குளித்த பெண்களில் புகைப்படங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் அதை பல்வேறு இணையதளங்களுக்கு விற்பனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாரும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலிஸார் கூறியுள்ளனர்.