கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.
இந்த நிலையில், கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள தனது தூதரகத்தையும் பாகிஸ்தான் அரசு விற்க முடிவுசெய்திருப்பதாகவும், சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் தூதரகக் கட்டடத்தைப் பலர் ஏலம் எடுப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தங்கள் நாட்டில் கழுதைகள் அதிகம் இருப்பதால் அதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஏதாவது சமாளிக்க முடியுமா என்றும் பாகிஸ்தான் அரசு சிந்தித்து வருகிறது. மேலும்,
சர்வதேச நிதியத்திடமும் 650 கோடி டாலரை கடனாக பாகிஸ்தான் அரசு கோறியுள்ளது. எனினும் பாகிஸ்தான் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வழியில்லை என கூறப்படுகிறது.