உலகம்

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு அழகு சேர்க்க, வீட்டிற்கு முன்னால் காரை வைக்க அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும், ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் விமானங்கள் உள்ளன.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விலையுர்ந்த கார்கள் நிறைந்த தெருக்களைப் பார்த்தால் அது மிகவும் கவர்ச்சியாக இருக்கும். தெருக்கள் விமானங்களால் நிரப்பப்பட்டால் எப்படி இருக்கும் என்று மற்றொரு வழியில் சிந்தியுங்கள்..

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் புறநகர்ப் பகுதி கேமரான் ஏர்பார்க் எஸ்டேட்ஸ் (Cameron Airpark Estates). இந்த பகுதியை விமான பார்க் நகரம் என்றும் fly-in community என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே வீட்டில் கார் வைத்திருப்பது போல விமானம் ஒன்றை வைத்திருக்கின்றனர்.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

அதன் சுற்று வட்டாரப்பகுதியில், தங்களின் சொந்த வேலைக்கும், அலுவலக வேலைகளுக்கும் இந்த கேரேஜ் எனப்படும் சிறிய ரக விமானத்திலேயே பயணிக்கின்றனர். இதனால் இந்த நகரத்தின் வீட்டில் வாசல் மற்றும் சாலைகளின் இருபுறமும் கார்கள் நிற்பது போல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

இந்த விமான நகரம் உருவானதற்கு சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது. அதாவது இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, அமெரிக்கா ராணுவத்திற்கு அதிக விமானிகள் தேவைப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான விமானிகளுக்கு பயிற்சி அளித்து போருக்கு தயார்ப்படுத்தியது அமெரிக்க ராணுவம். இதனால் 1939 இல் 34,000 ஆக இருந்த விமானிகளின் எண்ணிக்கை, 1946 இல் 400,000 ஆக உயர்த்தப்பட்டது. அதனால் விமானங்கள் எளிதாக பறக்கவும் தரையிறங்கவும் பெரிய சாலைகளும் ஏராளமான விமான நிலையங்களும் அமைத்தனர்.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

இந்நிலையில், இரண்டாம் உலக போருக்கு பின்னால் இந்த விமான நிலையங்கள் பயனின்றி போகக்கூடாது என்பதற்காக அந்நாட்டு விமான சிவில் ஆணையம் அரசுக்கு ஒரு திட்டத்தை வழங்கியது. அதாவது இந்த விமான நிலையங்களையும், விமானத்தையும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடியிருப்பு பகுதியாக மாற்றலாம் என்பதே அந்த திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்த அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி உருவாகப்பட்டதே ஏர்பார்க் நகரம்.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

தற்போது அமெரிக்கா முழுவதும் 610 ஏர்பார்க் நகரத்தை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. கேமரூன் ஏர்பார்க் போன்ற குடியிருப்பு ஏர்பார்க் அல்லது ஃப்ளை-இன் சமூகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை, வெளியாட்கள் அனுமதியின்றி சொத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் உரிமையாளர்கள் அவர்களை அழைத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கூடுதல் பாதுகாப்பு நகரமாக அவை திகழ்கிறது.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

மேலும் இந்த தெருக்களில் உள்ள சாலைகள் விமானிகள் விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்ல உதவும் வகையில் மிகவும் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. விமானத்தின் அருகில் இருக்கும் அகலமான சாலையில் காரையும் ஓட்ட முடியும். தெருப் பலகைகள் மற்றும் லெட்டர்பாக்ஸ்கள் வழக்கத்தை விட குறைவாக வைக்கப்பட்டுள்ளது, இதனால் விமானங்களை இறக்கைகளால் தட்டாமல் ஓட்டலாம் என்கிறார்கள்.

“வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கும் அமெரிக்கர்கள்.. Airpark நகரம் பற்றி தெரியுமா?” - சுவாரஸ்ய தகவல் !

புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு அழகு சேர்க்க, வீட்டிற்கு முன்னால் காரை வைக்க அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும், ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் விமானங்கள் உள்ளன.

banner

Related Stories

Related Stories