வைரல்

உலகியே மிகப்பெரிய வாழைப்பழம் எந்த நாட்டில் உள்ளது?.. அதன் நீளத்தை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்!

உலகிலேயே 15 மீட்டர் கொண்ட மிகப்பெரிய வாழைமரம் பப்புவா நியூகினி என்னும் நாட்டில் விளைவிக்கப்பட்டு வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

உலகியே மிகப்பெரிய வாழைப்பழம் எந்த நாட்டில் உள்ளது?.. அதன் நீளத்தை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் எல்லோருமே வாழை மரத்தைப் பார்த்து இருப்போம். இதில் கிடைக்கும் வாழைப் பழத்தையும் நாம் சுவைத்து இருப்போம். பொதுவாக வாழைப் பழம் எனக்கு பிடிக்காது என்று யாராவது கூறி நாம் கேள்வி பட்டே இருக்க மாட்டோம். அந்த அளவிற்குச் சுவையான ஒரு பழம்.

அதேபோல் வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்கள் கலாச்சாரத்தில் ஒன்று. பண்டிகை நாட்கள், திருமண நாட்கள் போன்றவற்றில் வாழை இலை முக்கியமாக இடம் பெறும். அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரத்தோடு கலந்தது வாழைமரம்.

தமிழ்நாட்டில் நாட்டு பழங்களை விட மோரிஸ் வாழைப்பழம் தான் பெரிதாக இருக்கும். இந்த பழம் விற்பனைக்கு வந்தபோது நமக்கு எல்லாம் என்ன இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று நினைத்திருப்போம்.

உலகியே மிகப்பெரிய வாழைப்பழம் எந்த நாட்டில் உள்ளது?.. அதன் நீளத்தை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்!

ஆனால், இது எல்லாம் ஒரு பெரிய பழமா என சொல்லும் அளவிற்கு 18 சென்டிமீட்டர் அளவிற்கு வாழைப்பழம் உலகில் உள்ளது என்று சொன்னால் நீங்கள் முதலில் என்ன உருட்டுகிறார் என்றுதான் நினைப்பீர்கள். ஆனால் உண்மை இதுதான்.

பப்புவா நியூ கினி என்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்கிறது. இந்த மரத்தை Musa Ingens என்று அறிவியல் பெயரில் அழைக்கின்றனர். இது இந்த நாட்டில் மட்டும் அல்லாது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இந்த வாழை மரம் வளர்கிறது. இருப்பினும் பப்புவா நியூ கினி நாட்டில் வளரும் வாழை மரம்தான் உலகிலேயே பெரியது.

இந்த வகையான மரங்கள் 1954ம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 1989ம் ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இப்படி ஒரு வாழை மரம் உள்ளது என்பது உலகிற்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த வாழை மரத்தை பார்க்கவும், பழத்தை சாப்பிடவும் பப்புவா நியூ கினி நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

உலகியே மிகப்பெரிய வாழைப்பழம் எந்த நாட்டில் உள்ளது?.. அதன் நீளத்தை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்!

இந்த வாழை மரம் பனைமரங்களை போன்று 15 மீட்டர் வரை வளரக்கூடும். மேலும் 30 மீட்டர் வாழைமரமங்கள் கூட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மரத்தில் உள்ள வாழை இலை 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டது.

இதனால் இந்த பெரிய வாழை இலையை மலைவாழ் மக்கள் தங்கள் குடிசைகளின் மேற்கூரையாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் வாழைப்பழம் 18 சென்டிமீட்டர் அவரை நீளம் கொண்டது. இந்த மரத்தை வீட்டில் வளர்க்க முடியும் என முயற்சி செய்து பார்த்துள்ளனர். ஆனால் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

இதற்குக் காரணம் வெப்பமண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளர்க்க முடியாது. மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலையிலேயே இந்த வாழை மரத்தை வளர்க்க முடியும். இதனால் தான் இந்த மரம் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

banner

Related Stories

Related Stories