சாதனைகள் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஏன் என்றால் அவர்கள்தான் தங்களை நிரூபித்துக் காட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால் பறவைகள் போன்ற விலங்குகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த எந்த ஒரு அவசியமும் இல்லை. தங்கள் இஷ்டம் போல் வனத்தில் விலங்குகள் வளம் வரும். இந்நிலையில் பறைவை ஒன்று நிற்காமல் தொடர்ந்து 13,560 கிலோ மீட்டர் பரத்துள்ளதாக கின்னஸ் வேர்ட்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பறவைகள் பருவகாலங்களில் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து செல்வது வழக்கம். இந்த வகையில் வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியிலிருந்து லிமோசா லாப்போனிக்கா வகையைச் சேர்ந்த பரவை ஒன்று ஆஸ்திரேலியாவிற்குப் பறந்து சென்றுள்ளது.
இந்த பறவையில் சிப் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பறை 11 நாட்களில் 13,560 கிலோ மீட்டர் தொடர்ந்து எங்கும் நிற்காமல் ஆஸ்திரேலியாவிற்குப் பறந்து சென்று பயணம் செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பறவை ஓய்வுக்காகவோ, உணவிற்காகவோ எங்கும் தரை இறங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு 2007ம் ஆண்டு இதே இனத்தைச் சேர்ந்த பெண் பறவை ஒன்று 11,500 கிலோ மீட்டர் பறந்து சென்றதுதான் கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது அதே இனத்தைச் சேர்ந்த ஆண் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.