உலகம்

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !

உலகளவில் சுமார் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவாதாக ஐக்கிய நாடு அதிர்ச்சிகாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மனிதர் வாழ்வதற்கு அடிப்படை விஷயங்களாக உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பதே திகழ்கிறது. அதிலும் உணவு என்பது முதன்மையானவையாக விளங்குகிறது. அப்படி பட்ட உணவுகள் இன்னும் பல மக்களுக்கு ஒரு வேலை கூட சென்றடைய கடினமாக இருக்கிறது.

இப்படி இருக்க, தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினையே அழித்திடுவோம் என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, சிலர் தங்கள் உணவை வீணாக்காமல், உணவுக்காக கூட வழியின்றி இருப்பவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் இங்கிருக்கும் பலர் தங்கள் உணவை சாப்பிட முடியாமலோ, அல்லது கொண்டு வந்த உணவை விட வேறு பிடித்த உணவு கிடைத்தாலோ, அல்லது எதோ ஒரு சூழ்நிலையிலோ தங்கள் உணவை வீணடிக்கின்றனர்.

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !

அதற்கு வீடுகளில், ஓட்டல்கள், கோயில்கள், திருமண வீடுகள், விழாக்கள் நிறைந்த இடங்கள் என பலவற்றை உதாரணமாக கூறலாம். இப்படி தினந்தினம் மக்கள் உணவை வீணடிக்கின்றனர். உலகளவில் என்று எடுத்து பார்த்தால், பல டன்கள் அளவிற்கு தினமும் உணவை மக்கள் வீணாக்குகின்றனர்.

இந்த நிலையில் உலகளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும் உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டது.

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !

உலகளவில் உட்கொள்ளும் உணவின் அளவு, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுவதை விட வெகு தொலைவில் உள்ளது. இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையாகும். மதிப்பீடுகளின்படி, உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வுகளில் (global greenhouse gas emissions) 8-10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுகிறது. .

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2021 அறிக்கையின்படி, உலகளவில் உள்ள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டன் உணவை வீணடிக்கப்படுவதும், உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !

காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு மற்றும் கழிவு போன்ற கிரக நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் ஆகும். UNEP இன் உணவுக் கழிவு அட்டவணை அறிக்கையானது உணவுக் கழிவுகளை அளவிடுவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 12.3 இல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், ஒரு பொதுவான வழிமுறையை வழங்குகிறது.

இன்று வரை உள்ள மிக விரிவான உணவுக் கழிவுத் தரவு சேகரிப்பின் அடிப்படையில் உலகளாவிய உணவுக் கழிவுகளின் புதிய மதிப்பீடுகளை வழங்குகிறது. உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை, வீட்டு உணவுக் கழிவு என்பது உலகளாவிய சவாலாக இருப்பதையும், இப்போது தொடங்கும் பகுதிகளில் நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !

உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி கழிவுகள் மற்றும் மோசமான நிர்வாகத்தால் ஏற்படுவதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொருவரும் அல்லது பெரும்பாலான மக்கள் தங்கள் தட்டுகளில் சில உணவை விட்டுவிட்டு செல்லும் உணவுகள்தான் அதிக உணவு கழிவாக மாறுகிறது. அதுதான் இப்போதே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகும்.

உணவுக் கழிவு நெருக்கடியைச் சமாளிக்க UNEP பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிலையான உணவு முறைகள் திட்ட அதிகாரி கிளமென்டைன் ஓ'கானர் கூறினார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் Think Eat Save (திங்க் ஈட் சேவ்) உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.

“ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது..” - ஐக்கிய நாடுகளின் அறிக்கையால் அதிர்ச்சி !

இது நிலையான வளர்ச்சி இலக்கு 12.3 ஐ உருவாக்குவதற்கும், 2030 க்குள் உணவு கழிவுகளை பாதியாக குறைக்கவும் உதவும். GO4SDGs முன்முயற்சியின் ஒரு பகுதியாக UNEP இப்போது ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக், லத்தீன் அமெரிக்கன், கரீபியன் மற்றும் மேற்கு ஆசியாவில் பிராந்திய உணவுக் கழிவுப் பணிக் குழுக்களைத் தொடங்கியுள்ளது.

இந்தப் பணிக்குழுக்கள், தொழில்நுட்ப ஆதரவையும், பிராந்திய மட்டத்தில் பியர்-டு-பியர் கற்றலையும் வழங்கும், 25 நாடுகள் அடிப்படைகளை அளவிடவும், தேசிய உணவுக் கழிவுத் தடுப்பு உத்திகளை உருவாக்கவும் உதவும்.

banner

Related Stories

Related Stories