உலகம்

'அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை வழங்குங்கள்' -பிரிட்டன் பிரதமருக்கு பிரபலங்கள் கோரிக்கை !

பிரிட்டனில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவை கொடுக்க வேண்டும் என ரிஷி சுனக்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை வழங்குங்கள்' -பிரிட்டன் பிரதமருக்கு பிரபலங்கள் கோரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

'அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை வழங்குங்கள்' -பிரிட்டன் பிரதமருக்கு பிரபலங்கள் கோரிக்கை !

இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் பிரிட்டனின் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பதவியேற்றதும் இவருக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடிகள் சூழ்ந்து வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவை கொடுக்க வேண்டும் என ரிஷி சுனக்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை வழங்குங்கள்' -பிரிட்டன் பிரதமருக்கு பிரபலங்கள் கோரிக்கை !

பிரெக்சிட்க்கு பிறகு பிரிட்டனில் பொருளாதார பிரச்சனைகள் கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக அங்கு விலைவாசிகள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பலர் தங்கள் உணவு வழக்கத்தை குறைத்து கொள்வதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில், படி பிரிட்டனில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் 2-ம் ஆண்டு இறுதி வரை பள்ளியில் உணவை இலவசமாகப் பெறலாம். அதன்பின்னர் பொருளாதாரத்தை மையமாக வைத்து சில குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டை நீக்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவச உணவு வழங்கவேண்டும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்க்கு பிரபல பாடகர் ஜெய்ன் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories