உலகம்

சீனாவால் பூமிக்கு ஆபத்து.. பதற்றத்தில் விஞ்ஞானிகள் : விண்வெளியில் நடப்பது என்ன?

சீன ராக்கெட் ஒன்று பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவால் பூமிக்கு ஆபத்து.. பதற்றத்தில் விஞ்ஞானிகள் : விண்வெளியில் நடப்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விண்வெளியில் ராக்கெட்டுகளை செலுத்தி வருகின்றனர். மேலும் விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் வளரும், வளர்ந்து வரும் நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனால் விண்வெளியில், பூமியிலிருந்து அனுப்பப்படும் ராக்கெட்டுகள் அதன் செயல்பாட்டு காலம் இடிந்த பிறகு விண்ணில் அப்படியே குப்பைகள் போல் தேங்கி இருக்கிறது. இந்த ராக்கெட் பாகங்கள் பூமியில் விழாமல் இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்படாத ராக்கெட் பாகங்களால் எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு ஆபத்து வரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

சீனாவால் பூமிக்கு ஆபத்து.. பதற்றத்தில் விஞ்ஞானிகள் : விண்வெளியில் நடப்பது என்ன?

மேலும் ராக்கெட் பாகங்கள் பூமியில் விழாமல் இருக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் இணைந்து விதிகளையும் உருவாக்கி கடைவிரித்து வருகின்றனர். ஆனால் இந்த வீதியைச் சீனா மீறி வருவதாக குற்றச்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் சீனாவின் ராக்கெட் ஒன்று பூமியில் விழ உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீனாவில் இருந்து லாங் மார்ச் 5 பி ராக்கெட் கடந்த அக்டோபர் 31ம் தேதி ஏவப்பட்டது.

சீனாவால் பூமிக்கு ஆபத்து.. பதற்றத்தில் விஞ்ஞானிகள் : விண்வெளியில் நடப்பது என்ன?

இந்த ராக்கெட்டின் பாகும் ஒன்று அதன் சுற்றுவட்டட்பபாதையில் இருந்து விலகியுள்ளது. இதனால் இது பூமியில் விழுவதற்கான வாய்ப்பு உள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீன ராக்கெட்டின் மிகப் பெரிய பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதால் பெரிய விபத்து தவிற்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சீன ராக்கெட்டின் பாகங்கள் இதுவரை மூன்று முறை பூமியில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories