உலகம்

இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்.. Iphone தொடர்பான கட்டுப்பாட்டை மாற்றுமா ஆப்பிள்?

பிரேசிலில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்.. Iphone தொடர்பான கட்டுப்பாட்டை  மாற்றுமா ஆப்பிள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சாம்சங், ஒன் ப்ளஸ், நோக்கியா, விவோ, ரெட்மி என பல்வேறு ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஆப்பிளின் ஐஃபோன் மீதான மவுசும், எதிர்ப்பார்ப்பும் இன்றளவும் குறையாமலேயே உள்ளது.

அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல் போன் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. அதைத் தொடர்ந்து சுற்றுசூழல் மாசு மற்றும் எலக்ட்ரானிக் மாசை குறைக்கும் வகையில், செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.

இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்.. Iphone தொடர்பான கட்டுப்பாட்டை  மாற்றுமா ஆப்பிள்?

ஐ-போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் அதை பலர் குப்பையில் போடுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இதற்கு முன்னர் இதே காரணத்துக்காக பிரேசில் அரசு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்.. Iphone தொடர்பான கட்டுப்பாட்டை  மாற்றுமா ஆப்பிள்?

அண்மையில் பிரேசில் நாட்டில் சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்திருந்தது. சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கு மாறாக சார்ஜர் இன்றி ஐபோன் நிறுவனம் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories