உலகம்

துருக்கி : மனிதனின் வயிற்றில் முளைத்து வளர்ந்த அத்திமரம்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

இறந்துபோன சடலத்தின் வயிற்றில் இருந்து அத்திமரம் முளைத்து வளர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி : மனிதனின் வயிற்றில் முளைத்து வளர்ந்த அத்திமரம்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துருக்கியில் கிரேக்க எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில் அத்தி மரம் ஒன்று வளர்ந்துள்ளது. அந்த பகுதியில் அது போன்ற மரம் இல்லாததால் இது எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் ஒரு பகுதியாக மரத்தின் அடியில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அதில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மரத்தின் அடியில் ஒரு மனிதனின் சடலம் ஒன்று இருந்துள்ளது. அந்த சடலத்தின் வயிற்றில் இருந்தே இந்த அத்திமரம் முளைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

துருக்கி : மனிதனின் வயிற்றில் முளைத்து வளர்ந்த அத்திமரம்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

உருக்குலைந்து மோசமான நிலையில் இருந்த அந்த சடலத்தை ஆய்வாளர்கள் போலிஸாரின் உதவியுடன் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவரின் மரபணுக்களை வைத்து சோதனை செய்தபொது அந்த நபர், துருக்கி பழங்குடியினத்தை சேர்ந்த அகமது அர்க்யூன் என்பது தெரியவந்தது.

அவர் கடந்த 1974-ம் ஆண்டு முதல் காணாமல் போனதும் தெரியவந்தது. அந்த காலத்தில் துருக்கி எல்லையில் இரு பழங்குடி மக்களிடையே யுத்தம் நடைபெற்று வந்துள்ளது. அதில் ஒரு தரப்பில் அகமது அர்க்யூன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். அப்போது எதிரிகள் கைகளில் சிக்கிய அகமது அர்க்யூனை எதிரிகள் பிடித்து வந்து இந்த இடத்தில் வைத்து கொலைசெய்திருக்கலாம் என்று போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

துருக்கி : மனிதனின் வயிற்றில் முளைத்து வளர்ந்த அத்திமரம்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர், அத்திப்பழத்தை சாப்பிட்டிருப்பதாகவும், அந்த அத்திப்பழத்தின் விதைதான் அவரது வயிற்றில் இருந்து வளர்ந்துள்ளதாகவும் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories