உலகில் மனிதன் அறியாத மர்மங்கள் பல இருக்கிறது. பல்வேறு பழங்கால கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது இதை எல்லாம் அந்த காலத்தில் எப்படி செய்தார்கள் என்றே ஆய்வாளர்கள் அதிசயிக்கிறார்கள்.
எகிப்து பிரமிடுகள், தஞ்சை பெருவுடையார் கோவில் போன்ற கட்டிடங்கள் இப்போதும் அதிசயமாகவே உலா வருகிறது. இந்த நிலையில், எகிப்தில் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான பாலாடைக் கட்டியை (சீஸ்) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு 20 கி.மீ தொலைவில் சக்காரா எனும் பழமையான நகரம் அமைந்துள்ளது. இந்த நகரிம் பண்டையகால கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிடுகளை கொண்ட நகரமாகும்.
இங்கு எகிப்தில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு பெரிய சைஸ் பானை ஒன்று கிடைத்துள்ளது. அதனை சோதனை செய்தபோது அங்கு பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) இருந்துள்ளது. அதன் பின்னர் அதன் காலத்தை ஆராய்ந்தபோது அது சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.
இந்த சீஸ் கிமு 688 மற்றும் 525 காலகட்டத்திற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது சைப்ரஸ்/ஹலோமி வகை பாலாடைக்கட்டி (சீஸ்) என சொல்லப்படுகிறது. அதாவது செம்மறி ஆட்டு பாலை கொண்டு தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியாகும் (சீஸ்) . இதன மூலம் உலகின் பழமையான பாலாடைக்கட்டியாக (சீஸ்) இது கருதப்படுகிறது.