அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் யூஃபாலா (Eufaula) என்ற பகுதி ஒன்று உள்ளது. இங்கு வாழ்ந்து வரும் ஒரு குடும்பம் நேற்றைய முன்தினம் (சனிக்கிழமையன்று) தங்கள் வீட்டிற்குள் ஏதோ ஊர்ந்து வருவதாக உணர்ந்தனர். இருப்பினும் அதனை தேடி பார்த்தபோது அது காணாமல் போனது.
பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அந்த குடும்பத்தில் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மேற்கத்திய கழிவறையிலுள்ள கோப்பைக்குள் ஒரு பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே இது குறித்து சக குடும்பத்தாருக்கு தெரிவிக்கவே அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கழிவறையில் இருந்த பாம்பை உயிருடன் மீட்ட அதிகாரிகள், அதனை பத்திரமான பகுதியில் விட்டுள்ளனர். இதையடுத்து இதுகுறித்த புகைப்படத்தை தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளனர்.
அதில், "ஒரு நாள் முதல் அடுத்த நாள் வரை, எங்கள் ஷிப்டின் போது இது போன்று எந்த வகையான அழைப்பைப் பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியாது. இன்று விதிவிலக்கல்ல, இருப்பினும் கழிப்பறையில் ஒரு பாம்பு இருப்பது என்பது எங்களது சாத்தியக்கூறுகளின் பட்டியலில் இல்லை"
மேலும் இந்த பதிவிற்கு பலரும், தாங்கள் இனி கழிவறை பயன்படுத்தும்போது பார்த்து தான் பயன்படுத்துவோம் என்றும், வெளிச்சம் இல்லாமல் இனி பயன்படுத்தவே மாட்டோம் எனவும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.