சீனாவில் உள்ள சாங்ஷாவில் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டம் 42 அடுக்கு மாடிகளைக் கொண்டது.
இந்நிலையில் இந்த கட்டத்தில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீ முதல் தளத்திலிருந்து கடைசி தளம் வரை கொழுந்துவிட்டு எரிந்தது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
மேலும் இந்த தீ விபத்தின் காரணமாக நகரம் முழுவதும் புகைமண்டலாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் வடகிழக்கு ஜலின் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 2010ம் ஆண்டு 28 மாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.