உலகம்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு.. இதனை கோடி செலவா ?தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள் !

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் இந்திய மதிப்பில் 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு.. இதனை கோடி செலவா ?தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

அவரின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு.. இதனை கோடி செலவா ?தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள் !

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 55 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுள்ளது.

இது தவிர ராணி இறந்தபின்னர் புதிய அரசரின் பெயரில் ரூபாய் நாணயங்களை மாற்ற, தபாலில் பெயர் மாற்ற உள்ளிட்ட ஆவண மாற்றங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories