ஏமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த விமானம் ஓடுதளத்துக்கு வந்து அனிருந்து கிளம்பு தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென விமானத்தின் என்ஜினிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பிடித்ததை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் உடனடியாக சுதாரித்த அவர்கள், விமானத்தை ஓடுதளத்திலிருந்து வெளியேற்றினர். இதற்குள் புகை விமானத்தின் உள் பரவியுள்ளது. இதில் பயணிகள் 14 பேர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். எனினும் துரிதமாக செய்யப்பட்ட விமான பணியாளர்கள் விமானத்தில் இருந்த 145 பயணிகளை வெளியேற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் மஸ்கத் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகளை மாற்று விமானத்தில் கொச்சி அழைத்துவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இந்திய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.