அமெரிக்காவில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏமி க்ளூகி. இவரது தந்தை இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவர் வீட்டிலிருந்த தந்தையின் தேனீ வளர்ப்பு உபகரணங்களை எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அவரது தந்தை 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று அவருக்குக் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தை ஏமி க்ளூகி தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதம் வைரலாகி இணைய வாசிகளை வெகுவாககவர்ந்து வருகிறது.
அந்த கடிதத்தில், "தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள எனது குழந்தைகளில் ஒருவரால் இந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். தேனீ வளர்ப்பு மிகவும் எளிதானது. இதை நீங்கள் இணையத்திலேயே கற்றுக்கொள்ளலாம்.
தேனீக்கள் தேனை மட்டுமல்ல வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கும். எனவே நீங்கள் பயப்படாமல் தைரியமாகத் தேனீ வளர்ப்பில் ஈடுபடுங்கள். இப்படிக்கு அன்பு அப்பா என எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் ஜூலை 27,2012 என்ற தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் வைரலானதை அடுத்து ஏமி க்ளூகி, "இவ்வளவு கவனத்தை ஈர்க்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என் அப்பா இதைப் பாராட்டியிருப்பார். இந்த கடிதம் எழுதிய ஆண்டில் நானும், எனது அப்பாவும் கோடையில் சென்ற பைக் ட்ரிப் போட்டோவை இணைந்துள்ளேன்' என தெரிவித்துள்ளார். இவரின் இந்த இரண்டு பதிவும் இணைய வாசிகளிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.