உலகம்

இந்த கம்பெனியில் குறைந்தபட்ச சம்பளமே 63 லட்சம்.. இங்கு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 63 லட்சம் வழங்கி வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த கம்பெனியில் குறைந்தபட்ச சம்பளமே 63 லட்சம்.. இங்கு   வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதுமே முதலில் ஒருவர் வேலையில் சேரும் போது அவருக்குக் குறைந்தபட்ச ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதன் பின்னர் அவர்களின் வேலைத் திறமைகளுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்படும். மேலும் பெரிய நிறுவனங்களில் மட்டுமே 50 ஆயிரம் முதல் 4,5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

தற்போது அதிகபட்ச ஊதியமாக ரூ. 50 ஆயிரம் வாங்குவதே பலருக்கு சிரமமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குறைந்தபட்ச ஊதியமே ரூ.63 ஆயிரம் கொடுப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த கம்பெனியில் குறைந்தபட்ச சம்பளமே 63 லட்சம்.. இங்கு   வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டான் ப்ரைஸ். இவர் தனது சகோதரர் லூகாஸ் என்பவருடன் சேர்ந்து கிராவிட்டி பேமெண்ட்ஸ் என்ற நிறுவனத்தை 2004ம் ஆண்டு தொடங்கியுள்ளார். இவர் தொடங்கிய கிராவிட்டி பேமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்குத்தான் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.63 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட டான் ப்ரைஸ், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 80,000 அமெரிக்க டாலர்களை, இந்திய மதிப்பில் ரூ. 63 லட்சம் வழங்கி வருகிறோம். இதேபோன்று மற்ற நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு வழங்க முடியும்.

நாங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் வழங்குகிறோம். எங்கள் நிறுவனத்தில் ஒருநாளைக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து இவரின் இந்த சமூகவலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து அவரின் பதிவுக்குப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், கனடாவில் நீங்கள் நிறுவனத்தைத் தொடங்கினால் முதல் விண்ணப்பமே எண்ணுடையதாக்கத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். மற்றொருவர், நீங்கள் மற்ற நிறுவனங்களைக் குறைசொல்வதுபோல் உள்ளது என தெரிவித்துள்ளார். இப்படி பலரும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories