கனடாவின் ஒன்டாரியோ என்னும் பகுதியைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் கடும் விரக்தியில் இருந்த அந்த ஊழியர் தான் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளரை பழிவாங்க தீர்மானித்துள்ளார். அதன்படி கிரேன் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு இருந்த முஸ்கோகா என்னும் ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் நிறுவனத்தின் உரிமையாளரின் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அவரின் வீட்டினை கிரேன் கொண்டு இடித்துள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் பார்த்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு வந்த போலிஸார் அந்த ஊழியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 5000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள அவர் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர், அவர் கிரேன் கொண்டுவந்து வீட்டை இடிக்கும்போது வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், வீட்டை சீரமைக்கத்தான் பல ஆயிரம் டாலர் ஆகும் என்றும் கூறியுள்ளார்.