பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் பெர்னி எக்லெஸ்டோன். பிரபல தொழிலதிபரான இவர்தான் 'பார்முலா 1' கார் பந்தயங்களை நடத்தி வருகிறது. இவரது மகள் தான் தமரா எக்லெஸ்டேடான். இவர் 2019ம் ஆண்டு கணவருடன் பின்லாந்து சென்றுள்ளார்.
அப்போது லண்டனில் உள்ள இவரது அரண்மனை தோட்ட வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் ரூ.247 கோடியாகும்.
இந்த கொள்ளை நாட்டிலேயே மிக்பெரிய திருட்டு சம்பவமாகக் கருதப்படுகிறது. போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இருவரை ஒரு துப்புக் கூட கிடைக்கவில்லை. மேலும் காணாமல்போன பொருட்களில் ஒரு ஜோடி தோடுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போன பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.57 கோடி பரிசு வழங்கப்படும் என தமரா எக்லெஸ்டேன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்துக் கூறிய தமரா எக்லெஸ்டேன், "காணாமல்போன நகைகளை நான் மீண்டும் பார்க்க முடியாது என்பதை உணர்கிறேன். ஆனால் அதில் எங்களின் குடும்ப பாரம்பரிய பொருட்கள் உள்ளது. இது விலைமதிப்பற்றது. தனது பொருட்களைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.57.45 கோடி பரிசு அளிக்கத் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த மிகப்பெரிய பரிசு அறிவிப்பு நாடுமுழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.