உலகம்

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ.. பீதியில் அமெரிக்கா !

அமெரிக்காவில் சுமார் 10 ஆண்டுக்கு பிறகு ஒருவருக்கு போலியோ நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ.. பீதியில் அமெரிக்கா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போது கொரோனா போல், கடந்த 1948 - 1955 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போலியோ நோய் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. மேலும் இந்த நோய் தாக்கத்தில் கோடிக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டது.

இதனையடுத்து போலியோ தடுப்பூசி கண்டறியப்பட்டதோடு, அந்த தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அனைத்து நாடுகளும் உத்தரவு பிறப்பித்தன. அதன்படி தற்போது வரை இந்தியாவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ.. பீதியில் அமெரிக்கா !

கடந்த 1979 ஆம் ஆண்டுடன் அமெரிக்காவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அதன்பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற ஒரு ஏழு மாத குழந்தைக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது.

பின்னர், அண்மைக்காலமாக அங்கு போலியோ நோய் கண்டறியாத நிலையில், தற்போது ஒரு இளம் பெண்ணிற்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேறு எந்த நாட்டிற்காவது சென்று வந்தாரா? என்பது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ.. பீதியில் அமெரிக்கா !

10 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண்ணிற்கு போலியோ நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு போலியோ நோய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories