மெக்ஸிகோவில் ஐரோப்பியர் குடியேறிய பின்னர் பல நூற்றாண்டுகளாக அங்கு இனரீதியான பாகுபாடு தொடர்ந்து வருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தற்போது அங்கு இப்படி கொடூர இனபாகுபாடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் குரேடாரோ பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப்பள்ளியில் ஜுவான் ஜமோரானா என்ற 14 வயது சிறுவன் படித்து வருகிறார். அந்நாட்டின் ஓட்டோமி எனும் மொழியை பெரும் பழங்குடி சிறுவனான இவர், அங்கு பல முறை இனப்பாகுபாடு காரணமாக பல இன்னல்களை சந்தித்துள்ளார்.
சம்பவத்திற்கு பள்ளியில் இவர் அமரும் இருக்கையில் சிலர் மதுவை ஊற்றியுள்ளனர். இதை அறியாமல் அந்த சிறுவன் அங்கு அமர்ந்ததில், அவரது ஆடை ஈரமாகியுள்ளது. இதன்பின்னர் அவர் எழுந்த நிலையில் அங்குள்ள மாணவர்கள் அவர் ஆடையில் தீ கொளுத்தி விட்டுள்ளனர்.
இதில் அவர் உடல் மீது தீ பரவியநிலையில், அவர் கதறி துடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக அவரது பெற்றோர் கூறியபோது, பள்ளியில் இதற்கு முன்பே ஜுவான் இனரீதியாக புறக்கணிக்கப்பட்டார். ஆசிரியர் கூட இனரீதியாக பாகுபாடு காட்டினார்.அதைக் குறித்து பள்ளியில் புகார் அளிக்கப்பட்டபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.