உலகம்

“பக்ரீத்துக்கு பிரியாணிக்கு போட வைச்சிருந்த லட்ச ரூபாய் ஆட்டை திருடிட்டாங்க” - கிரிக்கெட் வீரர் குமுறல் !

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூ.90,000 மதிப்புள்ள ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பக்ரீத்துக்கு பிரியாணிக்கு போட வைச்சிருந்த லட்ச ரூபாய் ஆட்டை திருடிட்டாங்க” - கிரிக்கெட் வீரர் குமுறல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இஸ்லாமிய மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையில், ஆடு பலி கொடுத்து பிரியாணி போடுவது வழக்கம். அதன்படி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் பலி கொடுப்பதற்காக ஆறு ஆடுகள் வாங்கப்பட்டுள்ளது. அப்படி வாங்கப்பட்ட அனைத்து ஆடுகளையும் தனது வீட்டின் பின்புறத்தத்திலுள்ள தொழுவத்தில் வைத்து பாதுகாத்து வந்தார். மேலும் அதனை பராமரிக்க ஒரு உதவியாளரையும் நியமித்தார்.

“பக்ரீத்துக்கு பிரியாணிக்கு போட வைச்சிருந்த லட்ச ரூபாய் ஆட்டை திருடிட்டாங்க” - கிரிக்கெட் வீரர் குமுறல் !

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆடுகளை பராமரித்து வந்தவர் அசந்து தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் விலையுயர்ந்த ஆடு ஒன்றை திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை எழுந்து பார்க்கையில் ஆடு திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆடு திருடு போய்விட்டதாக, கம்ரான் அக்மலின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். திருடப்பட்ட ஆட்டின் விலை ரூ.90,000 என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் அதிகாரிகள், விரைவில் ஆட்டை மீட்போம் என்று உறுதியளித்தனர்.

“பக்ரீத்துக்கு பிரியாணிக்கு போட வைச்சிருந்த லட்ச ரூபாய் ஆட்டை திருடிட்டாங்க” - கிரிக்கெட் வீரர் குமுறல் !

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல், கடைசியாக 2010 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பிறகு பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories