உலகம்

பணத்துக்காக 13 ஆண்டுகள் நடிப்பு.. அரசை ஏமாற்றி ரூ.6 கோடி மோசடி- பக்கத்து வீட்டுக்காரரால் வெளிவந்த உண்மை!

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளி என்று அரசை ஏமாற்றி ரூ.6 கோடி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்துக்காக 13 ஆண்டுகள் நடிப்பு.. அரசை ஏமாற்றி ரூ.6 கோடி மோசடி- பக்கத்து வீட்டுக்காரரால் வெளிவந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷையரை சேர்ந்த ஃபிரான்சஸ் நோபல் (66) என்ற பெண் கவுண்டி கவுன்சிலில் கோரிக்கை ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், இதனால் தனக்கு உதவித் தொகை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்ற கவுன்சில் அவருக்கு மாற்றுத்திறனாளிளுக்கு வழங்கப்படும் 'நேரடி கட்டண பராமரிப்பு தொகுப்பு' முறையில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளது. இந்த தொகையை கிட்டதட்ட 13 ஆண்டுகளாக அவர் பெற்று வந்துள்ளார்.

பணத்துக்காக 13 ஆண்டுகள் நடிப்பு.. அரசை ஏமாற்றி ரூ.6 கோடி மோசடி- பக்கத்து வீட்டுக்காரரால் வெளிவந்த உண்மை!

இந்த தகவல் ஃபிரான்சஸ்ஸின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனிடையே நோபல் தனது நாயை அதிகாலையில் அழைத்துச் செல்வதையும் அவர்கள் பார்த்துள்ளனர். மேலும் ஃபிரான்சஸ்ஸை தீவிரமாக கண்காணித்ததில் அவர் மாற்றுத் திறனாளி அல்ல என்பதும், அவர் இத்தனை ஆண்டுகள் அரசை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவருக்கு நீதிமன்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர் மேல் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையில் அவர் தான் மாற்றுத்திறனாளி என்று பொய் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பணத்துக்காக 13 ஆண்டுகள் நடிப்பு.. அரசை ஏமாற்றி ரூ.6 கோடி மோசடி- பக்கத்து வீட்டுக்காரரால் வெளிவந்த உண்மை!

இதைத் தொடர்ந்து இவருக்கு நான்கு ஆண்டு 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசை ஏமாற்றியதன் மூலம் அரசிடமிருந்து 3 ஆண்டுகளில் ரூ.6 கோடி ரூபாய் அளவு பெற்றுள்ளார். மேலும் இதில் பெரும் பணத்தை இதனை அமெரிக்காவிற்கு ஆடம்பர விடுமுறைக்கு சென்ற தனது மகள் மற்றும் மருமகனுக்கு கொடுத்துள்ளார். இவரது இந்த மோசடி இங்கிலாந்தில் நடந்த மிகப்பெரிய மோசடி வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories