உலகம்

2 ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் மீது பாலியல் புகார்.. வீட்டு சிறையில் போலிஸ் அடைப்பு: நடந்தது என்ன?

பாலியல் புகாரில் 2 ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குநரை போலிஸார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் மீது பாலியல் புகார்.. வீட்டு சிறையில் போலிஸ் அடைப்பு: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கனடாவைச் சேர்ந்தவர் பால் ஹக்கீஸ். பிரபல இயக்குநரான இவரின் படைப்பில் 2004ம் ஆண்டு 'கிராஷ்' என்ற படம் வெளியானது. குற்ற பின்னணி கொண்ட கிரைம் திரில்லர் படம் என்பதால் இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

2 ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் மீது பாலியல் புகார்.. வீட்டு சிறையில் போலிஸ் அடைப்பு: நடந்தது என்ன?

இதையடுத்து 2006ம் ஆண்டு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை 'கிராஷ்' படம் வென்றது. அதோடு சிறந்த திரைக்கதை என்ற ஆஸ்கர் விருதையும் 'கிராஷ்' படமே வென்றது. இதனால் இயக்குநர் பால் ஹாக்கீஸ்கு ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த இரண்டு ஆஸ்கர் விருது வென்றதால் அவரை உலகமே கொண்டாடியது.

2 ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் மீது பாலியல் புகார்.. வீட்டு சிறையில் போலிஸ் அடைப்பு: நடந்தது என்ன?

இந்நிலையில் இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவிற்குப் பால் ஹக்கீஸ் சென்றுள்ளார். அப்போது அவர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் எழுந்தது. இதையடுத்து போலிஸார் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், பால் ஹக்கீஸ் தங்கியுள்ள ஹோட்டல் அறையிலேயே அவரை காவலில் வைத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை வியாழன் நடைபெற உள்ளதால் அவரை வீட்டு சிறையில் வைத்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் மீது பாலியல் புகார்.. வீட்டு சிறையில் போலிஸ் அடைப்பு: நடந்தது என்ன?

இந்த வழக்கு குறித்து பால் ஹக்கீஸ் வழக்கறிஞர் பிரியா சவுத்ரி கூறுகையில், "பாலியல் புகார் வழக்கு விசாரணை முடிந்த பின்பு அவர் குற்றமற்றவர் என நிரூபணமாகும்' என தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் பால் ஹக்கீஸ் பாலியல் புகாரில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டும் 4 பெண்கள் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories