உலகம்

‘நான் கொல்லப்பட்டால்’.. பாக். முன்னாள் பிரதமர் பகீர் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் - பட்டியல் இதோ!

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.

‘நான் கொல்லப்பட்டால்’.. பாக். முன்னாள் பிரதமர் பகீர் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் - பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1.) வன்முறையில் ஈடுபட்டதாக திரிகோணமலையில் 15 பேர் கைது

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டகாரர்கள் மீது முன்னாள் பிரதமர் மகிந்தராஜ பக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது திரிகோணமலை எம்.பி. கபில அதுக்கோரளவின் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

2.) வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.

வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பின்வருமாறு:- ஆப்கானிஸ்தான், அங்கோலா, பிரேசில், புர்கினா பாசோ, சிலி, எத்தியோப்பியா, ஈரான், ஈராக், கஜகஸ்தான், கென்யா, லெசோதோ, மாலி, மொரிட்டானியா, மடகாஸ்கர், மலாவி, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சாம்பியா.

பூமியின், 40 சதவீத நிலப்பரப்பு சீரழிந்து வருகிறது. இதனால் மனிதகுலத்துக்கும், உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். நவீன உலக வரலாற்றில் இதுபோன்ற சவாலை சந்தித்தது இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) உயரமான குன்றிலிருந்து சாகசம் செய்து நீரில் குதிக்க முயன்ற கால்பந்து வீரர் கூர்மையான பாறையில் மோதி உயிரிழப்பு!

ஸ்பெயினில் சிறிது நாட்களுக்கு முன்பு தவறுதலாக பாறையில் இருந்து குதித்ததில் உயிரிழந்த சுற்றுலா பயணி யார் என்ற அடையாளம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், அவர் வேறு யாருமில்லை, முன்னாள் சிறந்த கால்பந்து வீரர் மவ்ராத் லாம்-ரபாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டச்சு கால்பந்து வீரரான அவர் நெதர்லாந்தில் எஸ் பி வி விட்டீஸ் அணிக்காக விளையாடியவர். இந்த சம்பவத்தை அவரது மனைவி கேமராவில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவில் அவரது மனைவி ‘ஓ கடவுளே..’ என்று அலறி கதறுவது இடம்பெற்றுள்ளது.

4.) நான் கொல்லப்பட்டால்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு பேச்சு!

பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, பாகிஸ்தானின் வரலாறு பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதனால், நான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகாரபலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதி துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால், மக்களுக்கே அதனை விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தரவேண்டும். நீங்கள் அதனை செய்வீர்களா? என அவர் கேட்டுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, நீங்கள் எனக்கு இரண்டு உறுதிமொழிகளை அளிக்க வேண்டும். எனக்கு ஏதேனும் நடந்து விட்டால், பின்னர் வீடியோவில் நான் குறிப்பிட்டுள்ள பெயரை கொண்ட நபர்களுக்கு எதிராக நீங்கள் போராடி, அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விட்டோம் என உறுதி செய்ய வேண்டும். இதனால், அதிகாரபலம் மிக்கவர்கள் முதன்முறையாக சட்டத்தின் முன் நிற்பார்கள் என கூறியுள்ளார்.

5) இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து மேலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் புத்த பூர்ணிமாவை தொடர்ந்து இன்று ஊரடங்கு விலக்கிகொள்ளப்பட்டது. இருப்பினும் மக்கள் விழாவில் பங்கேற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு வந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கி வருகின்றனர். இதனால் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories