உலகம்

5IN1_WORLD | ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள் : வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!

போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசினர்.

5IN1_WORLD | ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள் : வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1) போலந்து வெற்றிதின கொண்டாட்டம் : ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள்!

போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசினர்.

இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளுக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதியை ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. அதன்படி, போலந்து நேற்று ரஷ்யாவின் வெற்றி தினத்தை நினைவு கூறும்விதமாக வார்சாவில் உள்ள சோவியத் ராணுவ நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக போலந்துக்கான ரஷ்ய தூதர் செர்கய் ஆன்ட்ரீவ் வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் ஆதரவாளர்கள், கைகளில் உக்ரைன் கொடியை ஏந்தியபடி ரஷ்யத் தூதரைப் பார்த்து, "பாசிஸ்ட்", "கொலைகாரர்" என கோஷமிட்டனர். அப்போது சிலர் தூதர் மீது சிவப்பு சாயத்தை வீசினர்.

2) பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு 10 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிலிப்பைன்சின் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோசின் மகன் போங்போங் மார்கோஸ் மற்றும் தற்போதைய துணை அதிபர் லெனி ரோபெர்டோ ஆகிய இருவரில் ஒருவரே அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே போல் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் மகள் சாரா துதர்தே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

3) உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடைன் கையெழுத்து!

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை விரைவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடைன் கையெழுத்திட்டார். இதன்மூலம், ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்திவாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்திட அனுமதி அளிக்கப்படும். புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக தங்கள் நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் உக்ரேனியர்களின் போராட்டத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்!

இலங்கை தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். ஆளுங்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. இந்தநிலையில், வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில், 3 சிறைச்சாலை அதிகாரிகள் , 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பியோடிவிட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

5) அணு ஆயுத சோதனையை கைவிட்டால் உதவி செய்வோம்- வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு

வடகொரியா தனது அணு ஆயுத பரிசோதனைகளை கைவிட்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை வளர செய்யும் வகையில் மிக துணிச்சலான திட்டம் ஒன்றை வழங்குவதாக தென் கொரியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் இந்த அறிவிப்பை தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 15வது ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது தென்கொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. விரைவில் வடகொரியா அணு ஆயுதங்களையும் சோதிக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன என்பது குரிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories