உலகம்

சட்டவிரோத எண்ணெய் கிணறில் தீ விபத்து - உடல்கருகி 100க்கும் மேற்பட்டோர் பலி : நைஜீரியாவில் நடந்த பயங்கரம்!

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தில் செய்யும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோத எண்ணெய் கிணறில் தீ விபத்து - உடல்கருகி 100க்கும் மேற்பட்டோர் பலி : நைஜீரியாவில் நடந்த பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நைஜீரியா நாட்டில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக எண்ணெய் சுரங்கங்கள் செயல்படுகிறது. பொருளாதார தாக்கதை சமாளிக்க முடியாத அந்நாட்டு அரசு, முடிந்த அளவு தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாததன் விளைவாக, வறுமையின் காரணமாக அந்நாட்டு மக்கள் பலர் சட்டவிரோதமாக செயல்படும் எண்ணெய் சுரங்கங்களில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் சட்ட விரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், இமோவில் உள்ள சட்ட விரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்றைய தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன.

banner

Related Stories

Related Stories