உலகம்

ஒரே நாளில் 29,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. சீனாவை விடாது துரத்தும் கொரோனா.. நிரம்பும் மருத்துவமனைகள்!

ஒரே நாளில் 29,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. சீனாவை விடாது துரத்தும் கொரோனா.. நிரம்பும் மருத்துவமனைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில், 27 ஆயிரம் பேர் ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நகரில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து, வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற ஷாங்காய் நிர்வாகம் முடிவெடுத்து, அவற்றை ஒப்படைக்கக் கோரி, பொதுமக்களிடம் உத்தரவிட்டு உள்ளது. எனவே, போலீசார் வீடு வீடாகச் சென்று, அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களை போலீசார் மிரட்டும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ'க்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீன மக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2. அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்தியர்களும், இந்திய வம்சாவளிகளும் உயர் பதவியில் அமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் ரச்சனா சச்தேவா கோர்ஹோனனை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை அளிக்க வேண்டும். இவர் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறையில் துணை உதவிச்செயலாளராகவும், அண்டை கிழக்கு விவகாரங்கள் மற்றும் ஆசிய விவகார பணியக ஒருங்கணைந்த நிர்வாக அலுவலகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.

3. விண்வெளியில் சீனா தங்களுக்கென்று தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக மூன்று விண்வெளி வீரர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றனர்.இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அவர்கள் ஆறு மாதங்கள் கழித்து தற்போது பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர்.

4. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிநாட்டு சதி காரணமாக தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக இம்ரான் கான் குற்றம்சாட்டுகிறார்.இந்நிலையில் பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய அரசுக்கு எதிராக, உண்மையான சுதந்திரம் என்ற பெயரில் இம்ரான் கான் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களிடம் நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

5. தென்னாப்பிரிக்காவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கிய நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.இதற்கிடையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 68 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories