உலகம்

நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய ரஷ்ய வீரர்.. கார் ரேஸில் இருந்து தூக்கப்பட்ட 15 வயது சிறுவன்!

தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு

நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய ரஷ்ய வீரர்.. கார் ரேஸில் இருந்து தூக்கப்பட்ட 15 வயது சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்:

பேச்சுவார்த்தை நடத்த தயார் - மகிந்த ராஜபக்சே அறிவிப்பு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். ‘‘நாங்கள் தேர்வு செய்த ஆட்சியாளர்கள் பதவி விலகும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்’’ என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார். சமூக வலைத்தளங்களிலும் கடுமையான எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. அமைதி காக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சே, டெலிவிஷன் மூலம் வேண்டுகோள் விடுத்தும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. ராஜபக்சே சகோதரர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களில் இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகியோருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், மது விருந்தில் பங்கேற்றதற்காக போலிசார் விதித்த அபராதத்தைச் செலுத்திவிட்டேன். விதிகளை மீறி மதுவிருந்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

3) நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய ரஷ்ய வீரர் அணியில் இருந்து நீக்கம்

போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில், கார்ட் என்று அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார்-ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அணி சார்பில் பங்கேற்ற கார்ட் பந்தய வீரரான 15 வயது சிறுவன் ஆர்ட்டெம் செவெரியுகின் வெற்றிப்பெற்றார்.

அவர் வெற்றி கோப்பையை பெற்றபோது மேடையில் நாஜி பாணியில் வணக்கம் செலுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுவன் ரஷ்ய கார்ட் பந்தய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

4) நைஜீரியாவில் பயங்கரம் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு

நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவின் தலைநகர் ஜோஸ் நகரில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் புகுந்தது. மோட்டார் சைக்கிள்களில் சென்ற 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வீடுகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட அனைவரையும் வீதிக்கு தரதரவென இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பின்னர், வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வீடுகளுக்கு தீவைத்தனர். கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலில் 70 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், ஏராளமான கிராம மக்களை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5) தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு

தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில் “புதிய வைரஸ்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.

banner

Related Stories

Related Stories