உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்று Kinder Joy Surprise. இந்த சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற்காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் Kinder Joy சாக்லேட் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து Kinder Joy Surprise சாக்லேட்டை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை வித்துள்ளது. மேலும் பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை இழுத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பெரேரோ குழுமம் Kinder Joy Surprise சாக்லேட்டை வெளிநாட்டு சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. மேலும் விற்பனை செய்யப்படும் Kinder Joy Surprise சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் Kinder Joy சாக்லேட்கள் திரும்பப் பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கூறிய இந்திய அதிகாரி, "இந்தியாவில் விற்பனையாகும் Kinder Joy சாக்லேட்டுகள் புனேவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் Kinder Joy சாக்லேட்டுக்கும், Kinder Joy Surprise சாக்லேட்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவில் இந்த சாக்லேட் திரும்பப் பெறப்படாது” எனத் தெரிவித்தள்ளார்.