உலகம்

கடைசியில் Zombie நோயும் வந்துவிட்டதா? : கனடாவில் பரவும் விசித்திரமான நோய் மனிதர்களை பாதிக்குமா?

Zombie நோய் கனடாவில் பரவி வருவதாக ஒரு செய்தி வெளியாகி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடைசியில் Zombie நோயும் வந்துவிட்டதா? : கனடாவில் பரவும் விசித்திரமான நோய் மனிதர்களை பாதிக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

Zombie-கள் பற்றி நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். தமிழ் சினிமாவிலும் ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’ உள்ளிட்ட Zombie படங்கள் வந்திருக்கின்றன. இது ஒவ்வொரு மனிதராக பரவி அவர்களை விநோதமாக, வெறி பிடித்தவர்களைப் போல நடந்துகொள்ள வைக்கும்.

இப்படியான ஒரு நோய் சமீபத்தில் கனடாவில் பரவி வருவதாக ஒரு செய்தி வெளியாகி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கனடா நாட்டின் அல்பெர்டா, சாஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் உள்ள மான்களிடையே Chronic Wasting Disease (CWD) என்ற நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நோய் முதன்முதலில் 1960ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் 26 மாகாணங்களில் பரவியது. தற்போது இதே நோய் தற்போது கனடாவில் பரவி வருகிறது.

இந்த நோய் விலங்குகளை தாக்கியதும் நேரடியாக அதன் மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பைத் தாக்கும் என்றும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடிவது, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைககள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோய்கிருமிகள் மனித ரத்தத்துடன் கலந்துவிட்டால் அது மனித உடலுக்குள் பரவ துவங்கிவிடும் என்றும், மனிதர்களும் ஜாம்பிகளாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

எனினும், இந்த நோய் மனித உடலுக்குள் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ரீதியிலான ஆய்வுகள் இல்லை. இதுவரை இந்நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

banner

Related Stories

Related Stories