சீனாவில் 113 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
சீனாவின் தெற்கு மாகாணமான குவான்ஸி மண்டலத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் குவான்ஸி மாகாணத்தின் குன்மிங் நகரிலிருந்து குவாங்ஜு நகருக்கு 133 பயணிகள், விமான பணியாளர்களுடன் சீன ஈஸ்டர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுனத்துக்குச் சொந்தமான எம்யு 5357 என்ற போயிங் 737 விமானம் புறப்பட்டது.
இந்த விமானம் உரிய நேரத்துக்குள் குவாங்ஜு நகருக்கு விமானம் சென்று சேரவில்லை. இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் மலைப்பகுதியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.
தகவல் அறிந்து மீட்புப்படையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.